Main Menu

துப்பாக்கிச் சூட்டை நடத்திய பாலஸ்தீனிய பாதுகாப்பு அதிகாரி இஸ்ரேலிய துருப்புக்களால் சுட்டுக்கொலை?

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பாலஸ்தீனிய வாகன ஓட்டுநர் ஒருவர் இன்று (புதன்கிழமை) இஸ்ரேலிய வீரர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாலஸ்தீனியர் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அவர் பாதுகாப்புப் படையில் ஒரு அதிகாரியாக அடையாளம் கண்டுகொண்டுள்ளதாகவும் இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

பாலஸ்தீனிய நகரமான நாப்லஸுக்கு அருகே வீதியோரத்தில் இராணுவ நிலையில் நடந்த இந்த சம்பவத்தில் இஸ்ரேலிய உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.

இந்த சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்டவர் நாப்லஸுக்கு வெளியே ஒரு கிராமத்தில் வசிப்பவர் என அடையாளம் கண்டுகொண்டுள்ளதாக ஒரு பாலஸ்தீனிய பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டில் இரு தரப்பினருக்கும் இடையிலான இராஜதந்திரம் ஸ்தம்பித்ததிலிருந்து மேற்குக் கரையோர வன்முறைகளைத் தடுப்பதில் இஸ்ரேலுடன் பாலஸ்தீனிய பாதுகாப்பு சேவை ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...