Main Menu

ட்ரம்பின் புதிய ஒப்பந்தத்திற்கான திட்டத்தை நிராகரித்தது ஈரான்!

அணு ஆயுதத்தை வாங்குவதைத் தடுப்பதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய ஒப்பந்தத்திற்கான திட்டத்தை நிராகரிப்பதாக ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரௌஹானி தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக இன்று (புதன்கிழமை) கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி ட்ரம்ப் எப்போதும் வாக்குறுதிகளை மீறுபவர் என்றும் விமர்சித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டில் அணுசக்தி உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா விலகியமையினால் தெஹ்ரானின் அணுசக்தி பணிகள் தடுக்கப்பட்டது என்றும் இதனால் ஈரான் மீதான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டதையும் ஈரானிய ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

எனவே வொஷிங்டன் 2018 இல் கைவிட்ட குறித்த ஒப்பந்தத்திற்கு திரும்ப வேண்டும் என்றும் ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரௌஹானி தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஈரான், அணு ஆயுதத்தை வாங்குவதைத் தடுப்பதற்கு ஈரானின் 2015 அணுசக்தி ஒப்பந்தத்தை மாற்ற அமெரிக்கா மற்றும் ஏனைய நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...