Main Menu

ஜோர்ஜிய தேர்தலில் ஆளும் கட்சி முன்னிலை: எதிர்க்கட்சி போராட்டத்துக்கு அழைப்பு!

ஜோர்ஜியாவில் நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் ஜோர்ஜிய ட்ரீம் கட்சி (Georgian Dream Party) 50 வீத வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளது.

தேர்தல் நேற்று நடைபெற்றதுடன், இதன் ஆரம்ப முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இந்நிலையில் குறித்த முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அதை எதிர்க்கத் திட்டமிட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளது.

இந்த தேர்தல் முடிவுகள் நடுநிலையானதாக இருக்கவில்லை என எதிர்க்கட்சி குறிப்பிட்டுள்ளது.

மத்திய தேர்தல் ஆணையகத்தின் முதற்கட்ட முடிவு அறிவிப்பின்படி, ஜோர்ஜிய ட்ரீம் கட்சி 50.58 சதவீத வாக்குகளையும் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய இயக்கம் (United National Movement) 24.92 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான வாக்குகளை ஆளும் கட்சி பெறுமா என்பது இன்னும் உறுதியாகவில்லை.

பகிரவும்...