Main Menu

ஜேர்மனி மற்றும் இத்தாலி பயணத் தடையை நீக்குகிறது!

கொரோனா வைரஸ் தொற்றால் முடக்கப்பட்டிருந்த பயணத் தடையை விலக்க இருப்பதாக ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.

இதற்கமைய, வைரஸ் தொற்றினை சிறப்பாக கட்டுப்படுத்திய நாடான ஜேர்மனி, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் மற்றும் பிரித்தானியா, ஐஸ்லாந்து, நோர்வே, லிச்சென்ஸ்டீன் மற்றும் சுவிஸ்லாந்து ஆகியவற்றுக்கான பயணத் தடையை எதிர்வரும் ஜூன் 15ஆம் திகதி முதல் நீக்குகிறது.

ஜேர்மனிய வெளியுறவு அமைச்சர் ஹெய்கோ மாஸ், 29 ஐரோப்பிய நாடுகளுக்கான பயணக் கட்டுப்பாடுகளை நீக்கும் திட்டத்தை நேற்று (புதன்கிழமை) வெளியிட்டார்.

கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, இத்தாலியிலும் உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவிலான பயணத் தடைகள் விலக்கப்பட்டு உள்ளன.

இதன்படி, ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள் இத்தாலிக்கு வருகை தரலாம் என இத்தாலி பிரதமர் ஜிசப்பே கான்டே தெரிவித்துள்ளார்.

மேலும், ‘பல வாரங்கள் பெரும் தியாகத்திற்குப் பிறகு, புன்னகைக்க, மகிழ்ச்சியாக இருக்க நாங்கள் தகுதியானவர்கள்’ என அவர் கூறினார்.

பகிரவும்...