Main Menu

மிகவும் எளிதாக நடத்த திட்டமிடப்படும் பிரான்ஸ் தேசிய தினம்!

தேசியத் தின கொண்டாட்டங்களை மிகவும் எளிதாக நடத்துவதற்கு, பிரான்ஸ் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் (கொவிட்-19) பரவலைத் தடுப்பதற்காகவும், மக்கள் கூடுவதைத் தவிர்ப்பதற்காகவும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, மிகவும் எளிதாக, இராணுவ அணிவகுப்புகளின்றிய நினைவெழுச்சி நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளன.

வழமையாக இராணுவ அணிவகுப்புகள் முடிவடைந்து ஜனாதிபதிக்கு அணிவகுப்புகள் மரியாதை செய்யும், கொன்கோட் சதுக்கத்தில் (place de la Concorde) மட்டும் சில நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளன.

மக்களிற்கு அனுமதி வழங்கப்படாத இந்த தேசிய தின நிகழ்வில் மருத்துவத் துறையினர் மதிப்பளிக்கப்பட உள்ளனர்

இதில் 2.000பேர் பங்களிக்க, 2.500 விருந்தினர்களை ஐனாதிபதி அழைத்துள்ளதாகவும், சமூக இடைவெளிகள், சுகாதாரப் பாதுகாப்புக்கள் அனைத்தும் ஒழுங்கு செய்யப்பட்டே இந்த நிகழ்வு நடக்க உள்ளதாக எலிசே மாளிகை தெரிவித்துள்ளது.

தேசத்தை காப்பாற்றும் சேவையில் இராணுவத்தினருக்கு சமமாக மருத்துவர்கள் செயற்பட்டு வருவதால் அவர்களை பெருமைப்படுத்த இவ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 14ஆம் திகதி பிரான்ஸின் தேசிய தினம் (பாஸ்டில் தினம்) கொண்டாடப்படுகின்றது.

பகிரவும்...