Main Menu

ஜெயலலிதாவின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் – முதலமைச்சர்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

சென்னை போயஸ்தோட்டத்தில் ஜெயலலிதா நினைவில்லத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வியாழக்கிழமை) திறந்துவைத்தார்.

சென்னை போயஸ்தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்திற்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா படத்துக்கு  மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நினைவு இல்லமாக மாற்றம் செய்யப்பட்டுள்ள ‘வேதா நிலையம்’  இல்லத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள உயர்கல்வி மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலையை முதலமைச்சர் திறந்து வைத்தார். ட்ரோன் மூலம் இயக்கி, ஜெயலலிதாவின் முழு உருவச்சிலை திறந்துவைக்கப்பட்டது.

இதனையடுத்து, நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெப்ரவரி 24ஆம் திகதி ஜெயலலிதாவின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்தார்.

பகிரவும்...