Day: January 29, 2021
கருக் கலைப்புக்கு முற்றிலும் தடை விதிக்கப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலந்தில் ஆர்ப்பாட்டம்!
கருக்கலைப்புக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் போலந்தின் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சட்டம் அமுலுக்கு வருவதன் மூலம், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் பெண்கள் மற்றும் முறையற்ற பாலியல் உறவுகளில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே கருக்கலைப்பு செய்யப்படும்.மேலும் படிக்க...
கொரோனா பரவலை சிறப்பாக கையாண்ட நாடுகளில் நியூஸிலாந்துக்கு முதலிடம்!
மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலை சிறப்பாக கையாண்ட நாடுகளின் பட்டியலில், நியூஸிலாந்து முதலிடம் பிடித்துள்ளது. சிட்னியை தலைமை இடமாகக் கொண்ட லோவி நிறுவனம் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சிறப்பாக செயற்பட்ட நாடுகள் பற்றிய கணக்கெடுப்பை நடத்தியது.மேலும் படிக்க...
ஜெயலலிதாவின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் – முதலமைச்சர்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். சென்னை போயஸ்தோட்டத்தில் ஜெயலலிதா நினைவில்லத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வியாழக்கிழமை) திறந்துவைத்தார். சென்னை போயஸ்தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்திற்கு சென்றமேலும் படிக்க...
வரவு செலவு கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகிறது!
நாடாளுமன்றத்தின் வரவு செலவு கூட்டத்தொடர் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் உரையுடன் கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது. இதன்போது மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து ஜனாதிபதி உரையை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவுமேலும் படிக்க...
காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு நீதி கோரி ஊடக அமைப்புக்கள் போராட்டம்!
கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகித் எக்னலிகொடவுக்கு நீதிகோரி மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஊடக அமைப்புக்கள் இணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டமானது மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பு காலை 10.30 மணியளவில் ஆரம்பமானது. உழைக்கும் ஊடக தொழிற்சங்க சம்மேளனம், கிழக்கு மாகாண தமிழ்மேலும் படிக்க...
8வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நிஷா காந்தீபன் (29/01/2021)
தாயகத்தில் புங்குடுதீவு உரும்பிராயை சேர்ந்த பிரான்ஸ் Ivry-sur-Seine இல் வசிக்கும் காந்தீபன் சிவஜெனி தம்பதிகளின் செல்வப்புதல்வி செல்வி.நிஷா தனது 8வது பிறந்தநாளை 29ம் திகதி ஜனவரி மாதம் வெள்ளிக்கிழமை இன்று தனது அன்பு அக்கா சாளினியுடன் இணைந்து இல்லத்தில் கொண்டாடுகின்றார். இன்றுமேலும் படிக்க...
ஜனநாயக ரீதியான போராட்டத்திற்கு வட-கிழக்கிலுள்ள அனைத்து கட்சிகளும் ஆதரவு வழங்க வேண்டும்- சுரேஸ்
வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புகள் முன்னெடுக்கும் ஜனநாயக ரீதியான போராட்டத்திற்கு வட.கிழக்கிலுள்ள அனைத்து கட்சிகளும் அமைப்புகளும் ஆதரவு வழங்க முன்வரவேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்றமேலும் படிக்க...