Main Menu

ஜப்பான் வெள்ளம் – உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு

ஜப்பானில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 34 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜப்பான் நாட்டின் யூஷூ தீவின் குமமோடோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக குமா ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளம் காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.

கனமழை மற்றும் வெள்ளத்தால் பல்வேறு வீடுகள் நீரிழ் முழ்கின. இதனையடுத்து, 2 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 34 பேர் உயிரிழந்துள்ளதுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் 20 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது 34 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் 16 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளதாகவும் அவர்களது உடல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் மீட்பு குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...