சுற்றுலா சென்ற பாடசாலை பேருந்து விபத்து – 20 மாணவர்கள் உயிரிழப்பு
உகாண்டாவில் கல்விச் சுற்றுலா சென்ற பாடசாலை பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில், 20 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு உகாண்டாவில் கல்விச் சுற்றுலா சென்ற பாடசாலை பேருந்து, வேகக் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 15 வயதுக்குட்பட்ட 20 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
