மறைந்த ஈரானின் உச்ச தலைவர் கமேனியின் இறுதி ஊர்வலம்: கண்ணீருடன் விடைபெற்ற மக்கள்
தெஹ்ரான் மற்றும் கோம் ஆகிய நகரங்களில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற அரசுமுறை மற்றும் பொதுமக்களின் அஞ்சலி நிகழ்வுகளைத் தொடர்ந்து, பிராந்திய ரீதியிலான இறுதிச் சடங்குகளை நடத்துவதற்காக கமேனியின் பூதவுடல் ஈராக்கிற்கு கொண்டு வரப்பட்டது.
ஈராக்கிய மத மற்றும் அரசியல் தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நஜஃப் நகரின் வீதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இந்த இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளனர்.
கமேனி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பூதவுடல்கள் அடங்கிய வாகனம், நகரின் முக்கிய வீதிகள் வழியாக இமாம் அலி புனித தலத்தை நோக்கிச் சென்றபோது, பல்லாயிரக்கணக்கான மக்கள் அதனைச் சூழ்ந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
புனித தலத்தில் பூதவுடல்களுக்கு முன்னிலையில் நடத்தப்பட்ட பிரார்த்தனை நிகழ்வுகளில் மக்கள் மிகுந்த உணர்ச்சிகரமான முறையில் பங்கேற்றமை காணொளிகள் மூலம் பதிவாகியுள்ளன.
