Main Menu

ஜப்பானின் முன்னாள் பிரதமர் 101 ஆவது வயதில் காலமானார்

ஜப்பானின் முன்னாள் பிரதமர் யசுஹிரோ நகசொனே தனது 101 ஆவது வயதில் இன்று (வெள்ளிக்கிழமை) காலமானார்.

இரண்டாம் உலகப் போரின் கடற்படை அதிகாரியாக செயற்பட்ட இவர் ஜப்பானின் பேரழிவை கண்ணூடாக பார்த்ததுடன் நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர், 1980 களில் ஜப்பானின் பொருளாதார வெற்றியின் போதும் நாட்டுக்கு தலைமை தாங்கினார்.

இவர், 1982 முதல் 1987 வரையான ஐந்தாண்டு காலப்பகுதியில் ஜப்பான் சுதந்திர ஜனநாயகக் கட்சியின் தலைவராகவும் பிரதமராகவும் பணியாற்றினார்.

மேலும் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகனுடன் அவர் நெருங்கிய நட்புறவை பேணியவர் என்றும் இதனால் அவர்களின் நட்பு “ரொன் – யசு” என பிரபலமாக அழைக்கப்பட்டது.

இதேவேளை சமீபத்திய ஆண்டுகளில், யுத்தத்தை கைவிட்ட அமெரிக்க – வரைவு அரசியலமைப்பை திருத்துவதற்காக பணிகளிலும் அவர் முற்பட்டிருந்தார்.

ஜப்பானின் மிக மூத்த முன்னாள் பிரதமராகவும், உலகின் மிகவும் மூத்த முன்னாள் அரசியல் தலைவராகவும் யஷுஹிரோ நகசோனே வரலாற்றில் பதிவாகியுள்ளார்.

பகிரவும்...