Main Menu

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

நேற்று (17) இரவு முதல் ஒரு கிலோ கிராம் பருப்பினை அதிகபட்சம் 65 ரூபாவிற்கு விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோன்று டின் மீன் ஒன்று நூறு ரூபாவிற்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் பல நிவாரணங்களை எதிர்காலத்தில் வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்பில் இடம்பெற்று வரும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள், செயற்பாடுகள் குறித்து நேற்று (17) நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றிய விசேட உரையின்போதே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

இது தொடர்பான மேலும் சலுகைகள் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

மக்களின் அன்றாட வாழ்க்கையை இலகுபடுத்தவும், அவர்களின் நுகர்வின் அளவை உறுதிப்படுத்தவும் தாம் முன்மொழிவதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

அதற்கமைய, போதியளவு அரிசி விநியோகம் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மக்களின் வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்காத வகையில், அவசியமான பொதுச் சேவைகள், வங்கி, நிதி பரிவர்த்தனைகள், போக்குவரத்து ஆகியவற்றை குறைந்தபட்ச எண்ணிக்கையிலானோரைப் பயன்படுத்தி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மக்களின் அன்றாட வாழ்க்கையை இலகு படுத்துவதற்காக அவர்களின் நுகர்வு நிலையை உறுதி செய்வதற்கு நான் உத்தேசித்துள்ளேன். அரிசி வழங்கும் நடவடிக்கைகளை ஏற்கனவே நிலை பெறச் செய்துள்ளோம். நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு தடையாக அமையாதவாறு அரச சேவைகள், வங்க நிதி நடவடிக்கைகள், போக்குவரத்து செயற்பாடுகளை குறைந்தளவிலானோரைக் கொண்டு முன்னெடுப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

நாட்டில் வணிக நடவடிக்கைகளுக்கு பாரிய பாரமாகக் காணப்படும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களினால் வழங்கப்பட்டுள்ள கடன்களை மீளப் பெற்றுக்கொள்ளல் 6 மாத காலத்திற்கு இடைநிறுத்துவதற்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். அதேபோன்று வங்கியினால் வழங்கப்படும் பணி மூலதனம் 4 வட்டிக்கு பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

பகிரவும்...