Main Menu

சென்னையில் மேலும் ஒரு தூய்மை பணியாளருக்கு கொரோனா

சென்னை அடுத்த பெருப்பாக்கம் குடிசை மாற்று வாரியத்தில் தூய்மை பணியாளர்க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அப்பகுதியில் உள்ள வீதிகள் மூடப்பட்டுள்ளன.

சென்னை சைதாபேட்டையில் தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த ஒப்பந்த ஊழியரான 26 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால் அவர் வசித்து வந்த பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரியத்தில் உள்ள குடியிருப்பு வளாகத்தை சுகாதாரத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.

மேலும் குடிசை மாற்று வாரிய பகுதியிலிருந்து செம்மஞ்சேரி பகுதிக்கு யாரும் வராதளவிற்கு 12 அடி உயரம் உள்ள தடுப்புகளை அமைத்து வீதிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியை கடக்க முடியாமல் கழிவுநீர் கால்வாயில் இறங்கி செல்லும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதே போல், சென்னை திருவான்மியூரில் உள்ள காய்கறி சந்தையில் 63 வயதுடைய வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை அடையாறு இந்திரா நகர் பகுதியில் வசித்து வரும் இவர், கோயம்பேடு சந்தையிலிருந்து நாள்தோறும் பொருட்களை வாங்கி வருவது வழக்கம். தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால், கடந்த நாட்களில் அவர், சென்று வந்த இடங்கள் அவருடன் தொடர்பில் இருந்த நபர்களை சுகாதாரதுறை அதிகாரிகள் தனிமைப்படுத்தி வருகின்றனர்.

பகிரவும்...