Main Menu

சீன மக்கள் விடுதலைப் படையின் நன்சாங் கப்பல் மீண்டும் கடற்படையுடன் இணைவு!

சீன மக்கள் விடுதலைப்படையின் கடற்படையைச் சேர்ந்த நன்சாங் கப்பல், கடற்படையில் மீண்டும் இணைந்துள்ளது.

நன்சாங் கப்பல் கடற்படையில் மீண்டும் இணையும் விழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிங்தாவ் நகரிலுள்ள இராணுவத் துறைமுகம் ஒன்றில் நடைபெற்றது.

சீனா சொந்தமாக தயாரித்த நன்சாங் கப்பல் முதலாவது பத்தாயிரம் டன் நிலையுடைய 055 ரக விரைவு கப்பல் ஆகும்.

ஒட்டுமொத்த வடிவமைப்பு, தகவல் ஒருங்கிணைப்பு, இறுதி பொருத்தல் உள்ளிட்ட பல முக்கிய தொழில்நுட்ப பிரச்னைகளைத் தீர்த்து சீனா இந்த பெரிய ரக கப்பலை உருவாக்கியுள்ளது.

புதிய வான் தாக்குதல் எதிர்ப்பு, ஏவுகணை எதிர்ப்பு, கப்பல் எதிர்ப்பு, நீர் முழ்கி கப்பல் எதிர்ப்பு ஆகியவற்றுக்கான புதிய ஆயுதங்கள் இக்கப்பலில் உள்ளன. சீன கடற்படை விரைவு கப்பல் 4ஆவது தலைமுறை நிலையை எட்டியுள்ளதை இது குறிக்கிறது.

பகிரவும்...