Main Menu

லிபியாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்: ரஷ்யா- துருக்கி அதிருப்தி!

லிபியாவில் போர் நிறுத்த ஒப்பந்தம், அமுலுக்கு வந்த சில நிமிடங்களிலேயே மீறப்பட்ட சம்பவம் ரஷ்யா, துருக்கி நாடுகளை கொதிப்படைய வைத்துள்ளது.

லிபியாவில் தலைநகர் திரிபோலியைத் தலைமையமாகக் கொண்டு மேற்குப் பகுதியை ஆண்டு வரும் ஃபயெஸ் சராஜின் அரசுக்கும், கிழக்குப் பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் முன்னாள் இராணுவ தளபதி காலிஃபா ஹிஃப்தர் தலைமையிலான படையினருக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

எனினும், ரஷ்யா, துருக்கி நாடுகளின் முன்முயற்சியிலும், ஐ.நா. முன்னிலையிலும் மேற்கொள்ளப்பட்ட சண்டை நிறுத்தம் அமுலுக்கு வந்த சில நிமிடங்களிலேயே மீறப்பட்டது.

இதனை ஃபயெஸ் சராஜின் அரசு இதுபோன்ற தாக்குதல் தொடர்ந்தால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

லிபியாவை 40 ஆண்டுகளுக்கு மேல் ஆண்டு வந்த அல்-கடாஃபியின் ஆட்சியை, அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளின் உதவியுடன் கிளர்ச்சியாளர்கள் கடந்த 2011ஆம் ஆண்டு கவிழ்த்தனர்.

எனினும், அதற்குப் பிறகு அந்த நாட்டில் பல்வேறு ஆயுதக் குழுக்களும் தங்களுக்குள் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், துருக்கியைப் பூர்விகமாகக் கொண்ட பிரதமர் ஃபாயஸ் அல்-சராஜ் தலைமையிலான அரசுக்கு உதவும் நோக்கில், இராணுவ ஒத்துழைப்பு அளிக்க, துருக்கி தங்களது இராணுவத்தை அனுப்பியுள்ளது.

பகிரவும்...