Main Menu

சீனா அரசாங்கத்தின் ஆதரவுடன் உலகளாவிய ஹக்கிங் நடவடிக்கை: அமெரிக்கா தெரிவிப்பு

அமெரிக்காவைசேர்ந்த  மில்லியன் கணக்கானவர்கள் சீனாவின் இணைய வழி ஹக்கிங் நடவடிக்கைகளில் சிக்குண்டமை குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

மில்லியன் கணக்கான அமெரிக்கர்களின் இணையவழி கணக்குகள் ஹக்கிங்கில் சிக்குண்டுள்ளதாக எவ்பிஐயும் அமெரிக்க நீதி திணைக்களமும் தெரிவித்துள்ளன.

ஏழு சீன பிரஜைகளிற்கு எதிராக அதிகாரிகள் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.

குற்றச்சாட்டப்பட்டுள்ள ஏழு சீன பிரஜைகளும் 14 வருடங்களிற்கு மேல் இவ்வாறான குற்றசெயலில் ஈடுபட்டனர் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஏழு நபர்கள் குறித்த விபரங்களைதருபவர்களிற்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர் சன்மானம் வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

சீனாவை விமர்சனம் செய்யும் அமெரிக்கர்கள் வெளிநாட்டவர்கள் வர்த்தகர்கள் அரசியல்வாதிகளை சீனாவை சேர்ந்தஇந்த நபர்கள் இலக்குவைத்தனர் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆபத்தான மின்னஞ்சல்களை அனுப்பினார்கள் இதன் காரணமாக பல கண்டங்களை சேர்ந்த மில்லியன் கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டனர் என தெரிவித்துள்ள அமெரிக்க நீதிதிணைக்களம் இது சீனா அரசாங்கத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட உலகளாவிய ஹக்கிங் நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளது.

இன்றைய அறிவிப்பு நமது நாட்டின் இணைய பாதுகாப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும் அமெரிக்கர்களை குறிவைத்துஅவர்களின் கண்டுபிடிப்புகளை குறிவைக்கவும் சீனா மேற்கொண்டுள்ள தொடர்ச்சியான முயற்சிகளை அம்பலப்படுத்தியுள்ளது என எவ்பிஐயின் இயக்குநர் கிறிஸ்டர் ரே தெரிவித்துள்ளார்.

பகிரவும்...