Main Menu

சீனாவின் தவறினை நியாயப் படுத்துகின்றதா உலக சுகாதார அமைப்பு!

சீனாவை போன்று ஏனைய நாடுகளும் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கையை திருத்திக் கூற வாய்ப்புள்ளதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 869 ஆக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் ஆயிரத்து 290 உயிரிழப்புகளை அந்நாட்டு அரசு இணைத்துள்ளது.

இந்நிலையில், ஜெனீவாவில் virtual முறையில் செய்தியாளர்களைச் சந்தித்த உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப தலைவர்,

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையையும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் கணக்கிடுவது பெரும் சவாலாக உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், வுகான் பகுதி மருத்துவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்தியதால், சரியான நேரத்தில் அவர்கள் ஆவணங்களை தயார் செய்யவில்லை எனவும் குறிப்பிட்டார்.

சீனா உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்களினை தொடர்ந்தும் மறைப்பதாக அமெரிக்கா நேரடியாகவே தொடர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தது.

எனினும் அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்களை சீனா நிராகரித்திருந்ததுடன், உண்மையினை மறைக்கவில்லை எனவும் தெரிவித்து வந்தது.

அதேபோன்று உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு ஆதரவாக செயற்படுவதாக தெரிவித்து அதற்க வழங்கி வந்த நிதியினை இடைநிறுத்துவதாக ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

இந்தநிலையில் தற்போது மீண்டும் சீனாவிற்கு ஆதரவான முறையில் உலக சுகாதார அமைப்பு கருத்து வெளியிட்டுள்ளமையானது ட்ரம்பினை மேலும் கோப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பகிரவும்...