Main Menu

சிலியின் இளம் வயது ஜனாதிபதி: கேப்ரியல் போரிக்

சிலியில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களின் போது முக்கியத்துவம் பெற்ற இடதுசாரி சட்டமன்ற உறுப்பினர் கேப்ரியல் போரிக், நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கிட்டத்தட்ட 99 சதவீத வாக்குச் சாவடிகளில், கேப்ரியல் போரிக் 56 சதவீத வாக்குகளைப் பெற்றார். அவரது பழமைவாத எதிராளியான ஜோஸ் அன்டோனியோ காஸ்டுக்கு 44 சதவீத வாக்குகள் கிடைத்தன.

35 வயதில், போரிக் சிலியின் இளைய ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். அவர் மார்ச் மாதம் பதவியேற்பார்.

வெளியேறும் ஜனாதிபதி செபாஸ்டியன் பினேரா, ஒரு பழமைவாத கோடீஸ்வரர். மூன்று மாத மாற்றத்தின் போது தனது அரசாங்கத்தின் முழு ஆதரவை வழங்குவதற்காக போரிக் உடன் காணொளி வாயிலாக மாநாட்டை நடத்தினார்.

போரிக் பினேராவுடன் சுருக்கமான தொலைக்காட்சி தோற்றத்தில், ‘நான் அனைத்து சிலியர்களுக்கும் ஜனாதிபதியாகப் போகிறேன். இந்த மகத்தான சவாலை சமாளிக்க நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்யப் போகிறேன்’ என கூறினார்.

சிலியின் தெற்கில் உள்ள புண்டா அரினாஸைப் பூர்வீகமாகக் கொண்ட போரிக் ஒரு மாணவராக சாண்டியாகோவில் உள்ள சிலி பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் கூட்டமைப்பை வழிநடத்தினார். அவர் 2011இல் மேம்படுத்தப்பட்ட மற்றும் மலிவான கல்வியைக் கோரி முன்னணி போராட்டங்களை முன்னெடுத்தார்.

2014 வாக்கில், இன்னும் தனது 20களில், அவர் தேசிய காங்கிரஸில் கீழ்-சபை சட்டமன்ற உறுப்பினராக சேர்ந்தார். சிலியின் பரந்த மற்றும் குறைந்த மக்கள்தொகை கொண்ட தெற்குப் பகுதியான மாகலன்ஸை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

இந்த ஆண்டு பிரச்சாரத்தில், ஜெனரல் அகஸ்டோ பினோசேயின் 1973-1990 சர்வாதிகாரத்தால் விட்டுச் சென்ற நவதாராளவாத பொருளாதார மாதிரியை ‘புதைக்க’ அவர் உறுதியளித்தார். மேலும் சமூக சேவைகளை விரிவுபடுத்தவும், சமத்துவமின்மையை எதிர்த்துப் போராடவும் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பை அதிகரிக்கவும் ‘சுப்பர் பணக்காரர்’ மீது வரிகளை உயர்த்தவும் உறுதியளித்தார்.

பகிரவும்...