Main Menu

சிங்கப்பூர், தைவானில் மீண்டும் கொரோனா தொற்று

சிங்கப்பூர், தைவான், ஹாங்காங் ஆகிய நாடுகளில் கொரோனா தொற்று வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டதாக கூறி வந்த நிலையில், இந்த நாடுகளில் மீண்டும் தொற்று பரவி இருப்பது அங்கிருப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

 சிங்கப்பூரில் செவ்வாய் அன்று புதிதாக 23 பேருக்கும், தைவானில் 10 பேருக்கும், ஹாங்காங்கில் 5 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் இருந்து வரும் பயணிகளால் சிங்கப்பூர், தைவான் உள்ளிட்ட நாடுகளில் இரண்டாம் கட்ட தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே கொரோனா தொற்று பரவலின் இயல்பு குறித்து சரியாக கணிக்க இயலவில்லை என்று ஆசிய-பசிபிக் கிளினிகல் மைக்ரோபயாலஜி மற்றும் தொற்று கழக தலைவர் பால் அனந்தராஜா தம்பையா தெரிவித்துள்ளார். உலகில் இருந்து கொரோனா ஒட்டுமொத்தமாக ஒழிந்தால் தான் எந்த நாடும் பாதுகாப்பானதாக இருக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பகிரவும்...