Main Menu

சவுதி தாக்குதல் குறித்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் – பிரான்ஸ் ஜனாதிபதி

சவுதி அராம்கோவுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல் குறித்த விசாரணைகளுக்கு உதவி வழங்க தயார் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) சவுதி அரேபிய மகுட இளவரசர் மொஹமட் பின் சல்மானுக்கு தொலைபேசியில் அழைத்து இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தாக்குதலுக்கு உலகம் பலவீனம் காட்டாமல் இருப்பது அவசியம் என்று பிரெஞ்சு ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அத்தோடு தாக்குதல்களுக்கான காரணம் தொடர்பாக விசாரிக்கும் சர்வதேச நிபுணர்களுடன் பங்கேற்க தனது நாட்டின் தயார்நிலையையும் மக்ரோன் இதன்போது வெளிப்படுத்தியுள்ளார் என மாநில செய்தி நிறுவனமான SPA தெரிவித்துள்ளார்.

பகிரவும்...