Main Menu

சமூக ஊடக பிரபலங்களை கண்காணிக்க தீர்மானம்!

சமூக ஊடக பிரபலங்களை கண்காணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக டென்மார்க் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் தனது தற்கொலைக் கடிதத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததை தொடர்ந்து டென்மார்க் அரசாங்கம் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பிரபலமாக இருப்பவர்களுக்கென சில கொள்கைகளை வகுக்க தீர்மானித்துள்ளது.

டென்மார்க்கைச் சேர்ந்தவர் இன்ஸ்டாகிராம் பிரபலம் லார்சன். அவரை 3,36,000 பேர் பின் தொடர்கின்றனர். அவர் தமது தற்கொலை கடிதத்தை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட்டிருந்தார்.

அதற்கு 30 ஆயிரம் பேர் விருப்பக் குறி இட்டிருந்ததுடன், 8 ஆயிரம் பேர் பின்னூட்டம் செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து குறித்த விடயம் டென்மார்க்கில் விவாதமானதை தொடர்ந்து, இவரைப் போன்ற சமூக ஊடக பிரபலங்களை கண்காணிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, லார்சன் பகிர்ந்த தற்கொலை கடிதத்தை இன்ஸ்டாவிலிருந்து நீக்க இரு தினங்கள் ஆனதாக டென்மார்க் அரசாங்கம் அறிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...