Main Menu

சமூக ஊடகங்கள் ஜனநாயகத்திற்கு முக்கிய அச்சுறுத்தல் – துருக்கிய ஜனாதிபதி

சமூக ஊடகங்கள் ஜனநாயகத்திற்கு முக்கிய அச்சுறுத்தல்களில் ஒன்று என துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

எர்டோகனின் அரசாங்கம் இணையத்தில் போலிச் செய்திகள் மற்றும் தவறான தகவல்களைப் பரப்புவதை குற்றமாக்குவதற்கான சட்டத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

ஆனால் முன்மொழியப்பட்ட மாற்றங்கள் சுதந்திரமான பேச்சு மீதான கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

சமூக ஊடகங்கள் முதலில் தோன்றியபோது சுதந்திரத்தின் சின்னமாகப் போற்றப்பட்டது என துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்தார்.

ஆனால் இப்போது அது இன்றைய ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்களின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக மாறிவிட்டது என அவர் கூறியுள்ளார்.

ஆகவே இது சம்பந்தமாக, உண்மையின் கட்டமைப்பிற்குள் தவறான தகவல் மற்றும் பிரச்சாரத்தை எதிர்த்துப் போராடுவதற்கு பொதுமக்களை தெளிவுபடுத்த வேண்டியது அவசியம் என அவர் கூறினார்.

பகிரவும்...