Main Menu

பிரான்ஸிசிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான இறுதி வாக்கெடுப்பில் நியூ கலிடோனியா

பிரெஞ்சு நிலப்பகுதியிலிருந்து தனித்து இருக்கும் பல்வேறு தீவுகளை உள்ளடக்கிய பிராந்தியமான நியூ கலிடோனியா, பிரான்ஸிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான மூன்றாவதும் இறுதியுமான வாக்கெடுப்பை சந்திக்கவுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் இன்று இடம்பெறவுள்ள இந்த வாக்கெடுப்பு சுதந்திரக் கட்சிகளின் புறக்கணிப்பால் சில தடைகளை எதிர்கொள்ளும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வாக்கெடுப்பு மிகவும் அர்த்தமுள்ளதாக இல்லை, ஏனெனில் மக்கள் தொகையில் பாதி பேர் வாக்களிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளனர் என தலைநகரான நௌமியாவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்காளர் ஒருவர் கூறியுள்ளார்.

அவுஸ்ரேலியாவிற்கு கிழக்கே 2,000 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள சுமார் 185,000 வாக்காளர்களைக் கொண்ட பிரதேசம் நியூ கலிடோனியா ஆகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினராக உள்ள தன்னாட்சியற்ற 17 பிராந்தியங்களில் ஒன்றாக திகழும் நியூ கலிடோனியாவில் இன்னும் காலனித்துவம் முடிவுக்கு வரவில்லை.

1853ஆம் ஆண்டில் 270,000 மக்கள் வசித்து வந்த இந்த தீவுக்கூட்டத்தை பிரான்ஸ் முதன்முதலில் உரிமை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...