Main Menu

சந்திரயான் 2 : லாண்டருடன் தொடர்புகளை மேற்கொள்ளும் முயற்சியில் நாசா?

சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லாண்டர் கருவியுடன் தொடர்புகளை ஏற்படுத்த நாசா முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி நாசா விண்வெளி ஆய்வு மையம் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தின் அனுமதியுடன் லாண்டருடன் தொடர்பினை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் விக்ரம் லாண்டர் கருவிக்கு ரேடியோ அலைகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் “ஹலோ” என்ற செய்தி அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

மேலும் நாளை அல்லது நாளை மறுநாள் லாண்டருடன் தொடர்பினை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்றும் நாசா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

நிலவின் தென்துருவ பகுதியில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் முகமாக இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திராயன் 2 விண்கலத்தை அனுப்பிவைத்துள்ளனர்.

குறித்த விண்கலம் நிலவில் தரையிறங்குவதற்கு சில மணி நேரங்கள் இருந்த சந்தர்ப்பத்தில் விக்ரம் லாண்டருக்கும் கட்டுப்பாட்டு அறைக்கும் இடையிலான சமிக்ஞை துண்டிக்கப்பட்டது.

இருப்பினும் ஆர்பிட்டர் கருவி சிறப்பாக செயற்படுவதாகவும் அதன் மூலம் விக்ரம் லாண்டரை கண்டுப்பிடிக்க முடியும் எனவும் விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டனர். இதன்படியே சமீபத்தில் விக்ரம் லாண்டர் நிலவின் தென்துருவ பகுதியில் விழுந்துள்ளதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...