Main Menu

காணிகளை விடுவிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன – வடக்கு ஆளுநர்

படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

காணி விடுவிப்பு தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) காலை கிளிநொச்சியில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே வடக்கு ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

பொதுமக்களின் காணிகள் தொடர்பாக இன்று ஆராயப்பட்டதாகவும் இதுவே காணி விடுவிப்புக்கான ஆரம்ப வெற்றியென்றும் தெரிவித்தார். மேலும் இதற்கு இராணுவம் ஒத்திழைப்பு வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த கலந்துரையாடல் அமைதியான முறையில் எவ்வித வாக்குவாதங்களும் இல்லாது சுமுகமாக இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

விடுவிக்கப்படக்கூடிய காணிகள் இன்று இனங்காணப்பட்டதாகவும் அந்த பட்டியல் நீண்டு காணப்படுவதாகவும் வடக்கு ஆளுநர் தெரிவித்தார்.

பகிரவும்...