Main Menu

கோவை தெற்கு பகுதியில் போட்டியிடும் கமல்ஹாசன் வேட்பு மனு தாக்கல்

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்காக மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் வேட்பு மனுதாக்கல் செய்தார்.

தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, கமல்ஹாசன் கட்சி கூட்டணி, டி.டி.வி. தினகரன் கட்சி கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவற்றுக்கு இடையே 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. என்றாலும் ஆட்சியை கைப்பற்றுவதில் அ.தி.மு.க. கூட்டணிக்கும், தி.மு.க. கூட்டணிக்கும் இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது.

மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு பகுதியில் போட்டியிடுகிறார். இவர் பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வானதி சீனிவாசனை எதிர்கொள்வதால் இந்த தொகுதி மீதான எதிர்பார்ப்பு இப்போதே தொடங்கி விட்டது.

கமல்ஹாசன் இன்று காலை 9.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் கோவை புறப்பட்டு சென்றார். விமான நிலையத்தில் அவரை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்றனர்.

பின்னர் அவர் காரில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்தார். அப்போது கட்சியின் முக்கிய நிர்வாகிகள், கோவை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து மதியம் கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுதாக்கல் செய்தார். இன்று மாலை 6 மணியளவில் ராஜவீதி தேர்நிலை திடலில் பிரசாரத்தை கமல்ஹாசன் தொடங்குகிறார்.

பகிரவும்...