Main Menu

பிரான்ஸில் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி தடை செய்யப்படுமா? பிரதமர் விளக்கம்!

பிரான்ஸில் ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசியின் பயன்பாடுக்கு தடை விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கருத்துதெரிவித்த பிரதமர், ‘எங்களிடம் பக்கவிளைவுகள் தொடர்பான எந்தவிதமான உறுதியான தரவுகளும் இல்லை.

இதனால் நாங்கள் தொடர்ந்தும் அஸ்ராஸெனகா தடுப்பூசிகளைப் பயன்படுத்துவோம். ஆனால் இதன் பக்கவிளைவுகளில் எங்களிற்கு ஒரு சிறு சந்தேகம் ஏற்பட்டாலும் உடனடியாக பிரான்ஸிலும் அஸ்ராசெஸனகா தடை செய்யப்படும்’ என கூறினார்.

ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு இரத்த உறைவு ஏற்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு பிறகு நெதர்லாந்து, டென்மார்க், நோர்வே, பல்கேரியா, ஆஸ்திரியா, ஐஸ்லாந்து மற்றும் தாய்லாந்து ஏற்கனவே அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்தியுள்ளன.

பகிரவும்...