Main Menu

கொவிட்-19 தொற்று தீவிரம்: மூன்றாவது அவசரகால நிலையை அறிவித்தது ஜப்பான்!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று அதிகரித்ததையடுத்து, ஜப்பானின் மத்திய அரசாங்கம் மூன்றாவது அவசரகால நிலையை அறிவித்துள்ளது.

இதன்படி, டோக்கியோ, ஒசாகா, கியோட்டோ மற்றும் ஹியோகோ மாகாணங்களில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் ஜூலை மாதம் டோக்கியோ கோடைகால ஒலிம்பிக்கை ஜப்பான் நடத்தத் தயாராகி வருகின்றது மற்றும் ஜப்பான் ஏப்ரல் மாத இறுதியில் அதன் மிகப்பெரிய விடுமுறை காலங்களில் ஒன்றான கோல்டன் வீக்கில் நுழைவதற்கு சற்று முன்னதாக இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இந்த அவசர நடவடிக்கைகள் உணவகங்கள் மற்றும் பிற வணிகங்களுக்கு வரம்புகளை விதிக்கின்றன. ஆல்கஹால் விற்கும் அல்லது கரோக்கி வழங்கும் இடங்களுக்கு கடுமையான விதிகள் பொருந்தும். இவர்கள் முழுவதுமாக மூடும்படி கேட்கப்படுவார்கள்.

அதே நேரத்தில் பல நிறுவனங்கள் இரவு 8 மணிக்கு மூடப்படும். அபராதம் விதிக்கும் ஆனால் பெரும்பாலும் தன்னார்வ இணக்கத்தை நம்பியுள்ள புதிய கொள்கைகள் ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்து குறைந்தது மே 11 வரை இயங்கும்.

ஜப்பான் மக்கள் தொகையில் இதுவரை 1 சதவீதம் பேருக்கே ஃபைஸர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனால் மற்ற நாடுகளை விட தடுப்பூசி போடுவதில் அந்நாடு பின்தங்கிய நிலையிலேயே உள்ளது

பகிரவும்...