Main Menu

பிரான்ஸில் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்த பெண் பொலிஸ் அதிகாரிக்கு அஞ்சலி!

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் உள்ள பொலிஸ் நிலையத்தில் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த பெண் பொலிஸ் அதிகாரிக்கு சக தேசிய பொலிஸார் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

தலைநகரிலிருந்து தென்மேற்கே 57 கி.மீ (35 மைல்) தொலைவில் உள்ள ராம்பூலெட்டில் உள்ள பொலிஸ் நிலையத்தில் நிர்வாகப் பணி புரியும் இரண்டு பிள்ளைகளின் தாயான 49வயது ஸ்டெபானி என்ற அதிகாரி நேற்று (வெள்ளிக்கிழமை) தாக்குதல்தாரியின் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்தார்.

இந்தநிலையில் உயிரிழந்த அதிகாரிக்கு சக தேசிய பொலிஸார், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் ஆகியோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதனிடையே மத அடிப்படைவாதியான தாக்குதல்தாரி, இச்சம்பவத்தை தொடர்ந்து பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியவர் கடந்த 2009ஆம் ஆண்டு துனிசியாவிலிருந்து சட்டவிரோதமாக பிரான்சுக்கு வந்தவர் எனவும் பின்னர் முறையான ஆவணங்களை பெற்றுள்ளார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து பொலிஸ்நிலையங்கள் முன்பாகவும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பகிரவும்...