Main Menu

கொவிட்-19 எதிரொலி: ஸ்பெயினில் விமான பயணிகளின் வருகை 99.7 சதவீதம் சரிந்தது!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) எதிரொலி காரணமாக, ஸ்பெயினில் விமான பயணிகளின் வருகை சரிந்துள்ளதாக, மாநில சுற்றுலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், விமான பயணிகளின் வருகை 99.7 சதவீதம் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 21,327 விமான பயணிகள் நாட்டிற்குள் வருகை தந்துள்ளனர். இது ஒரு வருடத்திற்கு முன்பு 7 மில்லியனுக்கும் அதிகமானதாக இருந்தது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடந்த மார்ச் மாதத்தில் அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும் ஸ்பெயின் தடை செய்தது.

தற்போது ஸ்பெயினில் வைரஸ் தொற்று வீதம் குறைந்து வருவதால், பயண கட்டுப்பாடுகளை தளர்த்த அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது.

இதன்படி கடந்த வாரம், புதிய வருகையாளர்கள் தங்கள் வீடுகளில் இரண்டு வார காலத்திற்கு சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற புதிய அறிவிப்பை ஸ்பெயின் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...