Main Menu

சர்வதேச பயணிகள் சுயமாக தனிமைப் படுத்தத் தவறினால் 1,000 பவுண்டுகள் அபராதம்?

பிரித்தானியாவுக்குள் நுழையும் சர்வதேச பயணிகள், தங்களை 14 நாட்கள் சுயமாக தனிமைப்படுத்தத் தவறினால் அவர்களுக்கு 1,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உட்துறை செயலாளர் பிரிதி படேல், ‘டவுனிங் ஸ்ட்ரீட் கொரோனா வைரஸ்’ மாநாட்டில் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என நம்பப்படுகின்றது.

எனினும், இந்த விதிகள் அடுத்த மாதம் வரை நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய அரசாங்கம் ஏற்கனவே அறிவித்த 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தல் திட்டத்தின் கீழ், பயணிகள் செயற்படுகின்றார்களா என்பதை கண்காணிக்க சுகாதார அதிகாரிகள், பயணிகளால் வழங்கப்பட்ட முகவரிகளுக்கு சென்று சோதனை செய்வார்கள்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் இரண்டாவது அலைக்கு எதிராக, பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட திட்டங்களின் ஒரு பகுதியாக, சர்வதேச பயணிகள், அனைவரும் தங்கள் தொடர்புத் தகவலுடன் ஒரு படிவத்தை நிரப்புமாறு கேட்கப்படுவார்கள்.

வாகன ஓட்டுநர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகளுக்கும், அயர்லாந்து குடியரசிலிருந்து வருபவர்களுக்கும் விலக்கு அளிக்கப்படும். எவ்வாறாயினும், பிரான்ஸிலிருந்து பயணிக்கும் மக்களுக்கு விலக்கு அளிக்கப்படாது.

விமானம், படகு அல்லது ரயில் மூலம் இங்கிலாந்திற்கு வரும் எந்தவொரு பயணிகளும் இங்கிலாந்து எல்லைப் படை அதிகாரிகளுக்கு ஒரு முகவரியை வழங்க வேண்டும். அங்கு அவர்கள் சுயமாக தனிமைப்படுத்தப்படுவார்கள். இல்லையெனில் தங்குமிடம் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்படும்.

பகிரவும்...