Main Menu

கொவிட்-19 எதிரொலி: ஜேர்மனியின் தொழில் துறை உற்பத்தி ஏப்ரல் மாதத்தில் 17.9 சதவீதம் சரிந்தது!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று காரணமாக, ஜேர்மனியின் தொழில்துறை உற்பத்தி ஏப்ரல் மாதத்தில் 17.9 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரத்தை மூடியதன் பின்விளைவு இதுவென கூறப்படுகின்றது. உத்தியோகபூர்வ தரவுகளின்படி, கடந்த மார்ச் மாதத்தில் 8.9 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்திருந்தது.

தொழில்துறை உற்பத்தி தரவு முதன்முதலில் 1991ஆம் ஆண்டு ஜனவரியில் பதிவு செய்யப்பட்டதிலிருந்து அதன் மிகப்பெரிய வீழ்ச்சி இதுவென விபரிக்கப்படுகின்றது.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது, தொழில்துறை உற்பத்தி 25.3 சதவீதம் குறைந்துள்ளது.

வகைப்படி, ஏப்ரல் இயந்திர கருவிகள் மாதத்தில் 35.3 சதவீதம், இடைநிலை பொருட்கள் 13.8 சதவீதம் மற்றும் நுகர்வோர் பொருட்கள் 8.7 சதவீதம் குறைந்துவிட்டன.

முக்கிய வாகனத் தொழில் 74.6 சதவீதம் சரிவைக் கண்டது. ஆனால் கட்டுமானம் 4.1 சதவீதம் சரிவுடன் சிறப்பாக நடைபெற்றது.

பகிரவும்...