Main Menu

யு.எஃப்.சி. சம்பியன் கோனார் மெக்ரிகோர் மூன்றாவது முறையாக ஓய்வு பெறுவதாக அறிவிப்பு!

இரண்டு முறை யு.எஃப்.சி. சம்பியனான கோனார் மெக்ரிகோர் என அறியப்பட்ட கோனார் அந்தோணி மெக்ரிகோர், அல்டிமேட் சண்டை சம்பியன்ஷிப் தொடரிலிருந்து ஓய்வுப் பெறுவதாக தெரிவித்துள்ளார்.

31 வயதான கோனார் மெக்ரிகோரின் இந்த ஓய்வு அறிவிப்பானது, நான்கு ஆண்டுகளில் மூன்றாவது ஓய்வு அறிவிப்பாகும். இதற்கு முன்பு 2016ஆம் மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்து மீண்டும் ஓய்வு அறிவிப்பை மீளப் பெற்றிருந்தார்.

அல்டிமேட் சண்டை சம்பியன்ஷிப்பின் முன்னாள் இலகுரக மற்றும் ஃபெதர்வெயிட் சம்பியனான, அயர்லாந்தின் கோனார் மெக்ரிகோர், இதுவரை 22 வெற்றிகளையும் நான்கு தோல்விகளையும் பதிவு செய்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம், மெக்ரிகோர் கடைசியாக சண்டையிட்டிருந்தார். லாஸ் வேகாஸில் அமெரிக்க இரசிகர்களின் விருப்பமான டொனால்ட் ‘கவ்பாய்’ செரோனை வெறும் 40 வினாடிகளில் வீழ்த்தினார்.

தனது ஓய்வுக் குறித்து கோனார் மெக்ரிகோர் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘ஏய் தோழர்களே நான் சண்டையிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். ஆச்சரியமான நினைவுகளுக்கு அனைவருக்கும் நன்றி!’ என பதிவிட்டுள்ளார்.

கடந்த 1988ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் திகதி அயர்லாந்தின் க்ரம்லின், டப்ளினில் பிறந்த கோனார் மெக்ரிகோர், முன்னாள் தொழில்முறை கலப்பு தற்காப்புக் கலைஞர் மற்றும் குத்துச்சண்டை வீரர் ஆவார்.

பகிரவும்...