Main Menu

கொரோனா வைரஸ்: இஸ்ரேலில் ஆயிரக் கணக்கானோர் எதிர்ப்பு போராட்டம்

கொரோனா வைரஸ் நெருக்கடியை அரசாங்கம் தவறாக கையாண்டதால் ஏற்படும் பொருளாதார மத்தநிலையை சுட்டிக்காட்டி அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முகக்கவசங்களை அணித்திருந்தபோதும் சமூக விலகலை கடைப்பிடிக்கவில்லை என கூறப்படுகின்றது.

இதேவேளை கொரோனா வைரஸினால் வாழ்வதும் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்கும் செயற்பாடுகளும் அரசாங்கத்தினால் தாமதப்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த வெள்ளிக்கிழமை குறித்த ஆர்வலர்களை சந்தித்து அவர்களின் ஏமாற்றங்கள் குறித்து விவாதித்தார்.

மார்ச் நடுப்பகுதியில் இஸ்ரேல் கடுமையான முடக்கநிலையை அறிவித்தபோதும் மே மாத இறுதியில் கட்டுப்பாடுகளை நீக்கத் தொடங்கியபோதும் வேலையின்மை 21% ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...