Main Menu

கொரோனா – பிரான்ஸில் மருத்துவமனைகளில் 315 பேரும், மூதாளர் இல்லங்களில் 246 பேரும் உயிரிழப்பு!

பிரான்ஸில் கடந்த 24 மணிநேரத்தில் மருத்துமனைகளில் 315 பேரும், மூதாளர் இல்லங்களில் 246 பேரும் என மொத்தமாக 561 பேர் கொடிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பிரான்சின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் : 1,688 பேர் மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிரசிகிச்சைப் பிரிவில் இருந்து 255 பேர் வெளியேறியும், 220 பேர் அனுமதிக்கபபட்டும் உள்ளனர். 795 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது தற்போது 31,826 பேர் மருத்துமனைகளில் சிகிச்சைப்பெற்று வருவதாகவும், இதில் 6,845 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்காவது நாளாக தீவிரசிகிச்சைப்பிரிவுக்கு அனுமதிக்கப்படுகின்றவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றமையானது சுகாதாரத்துறையினை சற்று சுhவாசிக்கவைத்துள்ளது. இதுவரை மொத்தமாக 14,393 பேர் உயிரிழந்துள்ளனர். 27 186 பேர் குணமடைந்துள்ளனர்.

பகிரவும்...