Main Menu

வீறியெழல் புதுவருடம் இன்று இரவு பிறக்கின்றது!

சார்வரி தமிழ் புத்தாண்டு திருக்கணித பஞ்சாங்கத்தின் படி இன்று ஏப்ரல் 13 ஆம் திகதி 2020, பங்குனி 31 ஆம் நாள் திங்கட்கிழமை இரவு 8.23 மணிக்கு துலா லக்கினம் தனுசு ராசியில் பிறக்கிறது.

இதேவேளை, வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இன்று இரவு 7.26 மணிக்கு பிறக்கின்றது.

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி ஆண்டு பிறக்கும் போது மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் ராகு, மீனம் ராசியில் புதன், மகரத்தில் செவ்வாய்,குரு, சனி, தனுசு ராசியில் சந்திரன் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

இந்த சார்வரி ஆண்டுக்கு தமிழில் வீறியெழல் என்று பெயர்.  இது 60 ஆண்டுகளில் 34 ஆவது வருடம். இந்தப் புத்தாண்டு எப்படி இருக்கும் என்று இடைக்காடர் சித்தர் தனது நூலில் வெண்பாவாக சொல்லியிருக்கிறார்.

“சாருவரி ஆண்டதனிற் சாதிபதினெட்டுமே தீரமறு நோயால் திரிவார்கள் – மாரியில்லை பூமி விளைவில்லாமற் புத்திரரும் மற்றவரும் ஏமமின்றி சாவார் இயம்பு”

சார்வரி ஆண்டில் பதினெட்டு வகைச் சாதி மக்களும் வீரமிழந்து தீரம் அற்றுப்போய் நோயால் வெதும்பித் திரிவார்கள். மழையில்லை, நன்செய்ப் பயிர்கள் விளைச்சல் அறவே இருக்காது.

பூமியில் நவதானியங்களும் விளைச்சல் பாதிக்கும். தானிய விளைச்சல் இன்றி மக்கள் பட்டினியால் மடிவர். மண்ணின் மைந்தர்களுக்கு பாதுகாப்பு இருக்காது என வெண்பா சொல்கிறது.

நவகிரகங்களின் சஞ்சாரத்தின் படி நல்ல பலன்கள் சொல்லப்பட்டுள்ளது. இந்த சார்வரி புத்தாண்டில் மழை குறைவாக இருக்கும் என்றாலும் சித்திரை வருடப்பிறப்பில் நல்ல மழை பெய்யும்.

ஆண்டின் முற்பகுதியில் உஷ்ணமும் பிற்பகுதியில் அதிக மழையும் பெய்யும். விகாரி தமிழ் புத்தாண்டில் பஞ்சாங்கம் கணித்தது பல பலித்தது. நோய்கள் தாக்கியது. கொரோனா வைரஸ் உலகத்தையே உலுக்கி வருகிறது. அதேபோல பிறக்கப் போகும் தமிழ் புத்தாண்டான சார்வரி ஆண்டிலும் புதிய நோய் தாக்கும் என பஞ்சாங்கம் எச்சரித்துள்ளது.

பகிரவும்...