Main Menu

கொரோனா பரவல் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் இன்று முதல் ஆரம்பம்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து பல்வேறு விதமான விழிப்புணர்வு பிரசாரங்களை மத்திய அரசு இன்று (வியாழக்கிழமை) முதல் ஆரம்பிக்கவுள்ளதாக மத்திய தகவல்  ஒளிபரப்புத்துறை அமைச்சர்,  பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை முக கவசம் அணிவது,  தனிமனித இடைவெளியை பின்பற்றுவது, கைகளை கிருமி நாசினி கொண்டு அடிக்கடி சுத்தப்படுத்துவது ஆகியவற்றை தவறாமல் செய்வது தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

இந்த மூன்று விஷயங்களையும் தவறாமல் கடைபிடிப்பது குறித்து விரிவான விழிப்புணர்வு பிரசாரம் இன்று முதல் ஆரம்பமாகிறது. விளம்பர பலகைகள், சுவரொட்டிகள், ரயில், ஆட்டோ உள்ளிட்ட பொது போக்குவரத்து ஆகியவற்றில் பிரசாரம் தீவிரப்படுத்தப்படவுள்ளன.

சமூகவலைதளங்கள் வாயிலாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். குளிர்காலம் துவங்குவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பிரசாரம் ஆரம்பிக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...