Main Menu

கொரோனா தடுப்பூசி குறித்து இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும் – சீனா

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி தயாரிப்பது உள்ளிட்டவற்றில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து விரைவில் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என சீனா கூறியுள்ளது.

இந்தியா,  சீனா உள்ளிட்ட நாடுகள் அடங்கிய ‘பிரிக்ஸ்’ அமைப்பின் மாநாட்டில் காணொலி காட்சி வாயிலாக கலந்துகொண்டு கருத்து தெரிவித்த சீன ஜனாதிபதி சி ஜிங்பிங் மேற்படி கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தயாரிப்பது உள்ளிட்டவற்றில் இணைந்து செயலாற்றுவது குறித்து ரஷ்யா,  பிரேசிலுடன் பேசி வருகிறோம். இந்தியா,  தென்னாப்பிரிக்காவின் ஒத்துழைப்பையும் நாடுவோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான் கூறுகையில், “கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தயாரிப்பது அனைத்து நாடுகளுக்கும் அது கிடைப்பது ஆகியவற்றில் இணைந்து செயலாற்ற ‘கோவாக்ஸ்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் மூலமாக தடுப்பூசியை தயாரிப்பது மற்ற நாடுகளுக்கு உரிய அளவு கிடைப்பது உள்ளிட்டவற்றில் இணைந்து செயலாற்ற உள்ளோம். தடுப்பூசி தயாரிப்பது தொடர்பாக சீன நிறுவனங்கள் பல நாடுகளுடன் பேசி வருகின்றன. இந்தியா உள்ளிட்ட நாடுகளுடனும் விரைவில் பேசவுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...