Main Menu

சிரியா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் சிரிய விமான பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட 10பேர் உயிரிழப்பு

சிரியா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்ட போர் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

நேற்று (புதன்கிழமை) நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் மூன்று சிரிய விமான பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஏழு வெளிநாட்டு போராளிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டினரில் ‘ஈரானிய மற்றும் குட்ஸ் படையைச் சேர்ந்தவர்கள்’ என்ற ஐந்து போராளிகளும், தீர்மானிக்கப்படாத தேசியத்தைச் சேர்ந்த இரண்டு ஈரான் சார்பு போராளிகளும் அடங்குவதாக சிரிய மனித உரிமைகளுக்கான ஆய்வகம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல்கள் டமாஸ்கஸ் விமான நிலையத்திற்கு அருகிலும், தலைநகரின் தென்மேற்கிலும் இரண்டு வான் பாதுகாப்பு நிலைகளை குறிவைத்து நடத்தப்பட்தாக கண்காணிப்பு நிலையத்தின் தலைவர் ராமி அப்தெல் ரஹ்மான் தெரிவித்தார்.

மற்ற இலக்குகளில் டமாஸ்கஸுக்கு தெற்கே ஈரான் சார்பு போராளிகள் பயன்படுத்திய நிலைகள் மற்றும் வெடிமருந்து கிடங்குகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

ஈரானிய- லெபனான் ஹெஸ்பொல்லா படைகள் மற்றும் அரசாங்க துருப்புக்களை குறிவைத்து 2011இல் உள்நாட்டுப் போர் வெடித்ததில் இருந்து இஸ்ரேல், சிரியா மீது நூற்றுக்கணக்கான வான் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

பகிரவும்...