Main Menu

கொரோனா தடுப்பு மருந்து ஏற்றுமதி குறித்து பிரதமர் பெருமிதம்!

ஒரு காலத்தில் அம்மை நோய்த் தடுப்பு மருந்துக்குப் பிற நாடுகளை இந்தியா சார்ந்திருந்ததாகவும், இப்போது பல நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்துகளை வழங்கி வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாஸ்காமின் மாநாட்டில் காணொலியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

தேவையற்ற கட்டுப்பாடுகளில் இருந்து தகவல் தொழில்நுட்பத் துறையை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

அத்துடன் கொரோனா சூழலில் பல்வேறு கட்டுப்பாடுகளிடையே தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 2 விழுக்காடு வளர்ச்சி கண்டு 29ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் அவர் குறிபிட்டுள்ளார்.

பகிரவும்...