Main Menu

கொரோனா அச்சுறுத்தல் – இந்தியாவிற்கு உதவிக் கரம் நீட்டும் சர்வதேச நாடுகள்!

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக அங்குள்ள வைத்தியசாலைகளில் உயிர்வாயுக் கலன்கள், சுவாசக் கருவிகள், மருத்துவப் பொருட்களுக்கு பாரியளவில் தடுப்பாடு நிலவுகின்றது.

இந்தநிலையில் பல்வேறு சர்வதேச நாடுகளும் இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன.

அமெரிக்கா

  • கொரோனா தடுப்பூசியினை தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள் மீதான ஏற்றுமதித் தடை நீக்கப்படுகின்றது.
  • கொரோனா தடுப்பூசிகள், கொரோனா தடுப்பூசிகளுக்கான மூலப்பொருட்கள், பரிசோதனைக் கருவிகள், சுவாசக் கருவிகள், மருத்துவக் கருவிகள், பாதுகாப்பு உடைகள் ஆகியவற்றை அனுப்புகிறது.
  • நியூயோர்க்கிலிருந்து அனுப்பப்பட்ட 328 உயிர்வாயுக் கலன்கள் புது டில்லி சென்றடைந்துள்ளன.

பிரித்தானியா

  • 100 சுவாசக் கருவிகளும், காற்றிலிருந்து உயிர் வாயுவைப் பிரித்தெடுக்கும் 95 கருவிகளையும் முதற்கட்டமாக அனுப்பியுள்ளது.
  • 495 குறித்த கருவிகளுடன் வேறு சில மருத்துவப் பொருட்களையும் பிரித்தானியா அனுப்பி வைத்துள்ளது.

பிரான்ஸ்

  • உயிர்வாயு உற்பத்தி செய்யக்கூடிய 8 பெரிய கருவிகளை அனுப்பி வைக்கவுள்ளது.
  • அயர்லாந்து, ஜேர்மனி, அவுஸ்ரேலியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் உயிர்வாயுவைப் பிரித்தெடுக்கும் சாதனங்கள், சுவாசக் கருவிகள் ஆகியவற்றை அனுப்புகின்றன.
பகிரவும்...