Main Menu

கொரோனா அச்சுறுத்தல் – அகதி அந்தஸ்தை இடைநிறுத்திய மெக்சிகோ

வட அமெரிக்காவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டமையினை தொடர்ந்து, அகதி அந்தஸ்து கோரிக்கைகளை பரிசீலிக்கும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக மெக்சிக்கோ அறிவித்துள்ளது.

குறித்த இடைநிறுத்தம் நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மெக்சிக்கோவின் அகதி அந்தஸ்து தொடர்பான முகவரகம் தெரிவித்துள்ளது.

பல்வேறு அலுவலக நடவடிக்ககைகளை இடைநிறுத்துமாறு அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைவாக, இந்நடவடிக்கை இடைநிறுத்தப்படுவதாகவும், குடிவரவு அதிகாரிகளால் குறித்த கோரிக்கைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் எனவும், அகதி அந்தஸ்து நடைமுறைகள் தொடர்பான முகவரகமான கொமார் (COMAR) அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் மார்ச் 27ம் திகதி முதல் ஏப்ரல் 19 வரையில், வெளிவிவகார அமைச்சினால் கடவுசீட்டுகள் வழங்கும் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மெக்ஸிகோவில் ஆரம்பத்தில் 367 ஆக இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 405 ஆக உயர்ந்துள்ள அதேவேளை மொத்தமாக ஐந்து உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

இதனை தொடர்ந்தே குறித்த நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பகிரவும்...