Main Menu

கொரோனாவிலிருந்து மீள்வோர் எண்ணிக்கை 20.57% உயர்வு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை 20.57% உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலக நாடுகளை தொடந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து நோய் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இச்சூழலில், இந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால்,

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் ஆயிரத்து 684 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாதாகவும், இதன் மூலம் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 77 ஆக உள்ளதாக தெரிவித்தார்.

உயிரிழந்தோர் எண்ணிக்கை 718 ஆக உள்ளதாகவும், கடந்த 14 நாட்களாக கொரோனா பாதிக்கப்பட்ட 80 மாவட்டங்களில் புதிய பாதிப்பு எதுவும் உருவாகவில்லை என தெரிவித்தார்.

மேலும் வைரஸ் பாதிப்பிலிருந்து 4 ஆயிரத்து 748 பேர் குணமடைந்துள்ளதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வருவோரின் எண்ணிக்கை 20.57% உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நோய் பாதிக்கப்படாமல் பச்சை நிறத்தில் உள்ள மாவட்டங்களையும் புதிதாக நோய் ஏற்படாத வகையில் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பகிரவும்...