Main Menu

கொங்கோ தங்கச் சுரங்க சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக உயர்வு!

கொங்கோவில் தங்கச் சுரங்க சரிவில் சிக்கி உயிரிழந்த, சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் சமூக விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொங்கோவின் மணிமா மாகாணத்தில் உள்ள கம்பெனே நகரில் சட்டவிரோதமாக இயங்கும் சுரங்கத்தில் கடந்த புதன்கிழமை நடந்த சம்பவத்தின் ஆரம்ப இறப்பு எண்ணிக்கை 14ஆக இருந்த நிலையிலேயே, இந்த உயிரிழப்பு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக விவகார அமைச்சர் ஸ்டீவ் எம்பிகாய் கூறுகையில்,

“தப்பிப்பிழைத்தவர்களைத் தேடும் மீட்புப் பணியாளர்கள் மேலும் ஏழு சடலங்களை மீட்டனர். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மூன்று சுரங்கத் தொழிலாளர்களில் ஒருவர் வியாழக்கிழமை மருத்துவமனையில் இறந்தார்.

பாதிக்கப்பட்டவர்களை அடக்கம் செய்வதற்கு மாகாண அரசு பணம் செலுத்துவதோடு, காயமடைந்தவர்களின் மருத்துவ கட்டணங்களையும் ஈடுசெய்யும்’ என கூறினார்.

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் ஏராளமான கனிம வளங்கள் கொட்டிகிடக்கின்றன. இங்குள்ள சுரங்க தளங்களில் அடிக்கடி விபத்துக்கள் நிகழ்கின்றன.

கொங்கோவின் தென்கிழக்கு பிராந்தியத்தில் கொல்வெஸியில் க்ளென்கோருக்கு சொந்தமான செப்பு சுரங்கம், கடந்த ஜூன் மாதத்தில் இடிந்து விழுந்ததில் குறைந்தது 36 சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள் இறந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆங்கலோ-சுவிஸ் சுரங்க நிறுவனமான கூற்றுப்படி, ஒவ்வொரு நாளும் சராசரியாக 2,000 சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள் கொங்கோவில் தங்கள் தளங்களுக்குள் நுழைகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...