Main Menu

கொங்கோவில் இடம்பெயர்ந்தோர் முகாமில் போராளிகள் குழு தாக்குதல்: 60பேர் உயிரிழப்பு

கொங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாமில் போராளிகள் குழு நடத்திய தாக்குதலில், 60பேர் உயிரிழந்ததாக உள்ளூர் மனிதாபிமானக் குழு தெரிவித்துள்ளது.

நேற்று (புதன்கிழமை) இட்யூரி மாகாணத்தில் உள்ள புலேக்கு அருகிலுள்ள சாவோ முகாமில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு கோட்கோ போராளிகள் குழு பொறுப்பேற்றனர். நிலம் மற்றும் வளங்கள் தொடர்பான நீண்டகால பதற்றங்களுக்கு மத்தியில் கிழக்கு கொங்கோவில் செயற்படும் போராளிகளின் வரிசையில் கோட்கோ ஒன்றாகும்.

இதன் போராளிகள் இட்டூரியில் நூற்றுக்கணக்கான பொதுமக்களைக் கொன்றுள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதனிடையே கொங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள சந்தை ஒன்றில் மின் கேபிள் விழுந்ததில் மின்சாரம் தாக்கியதில் குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ்துறை தெரிவித்துள்ளது.

பகிரவும்...