Main Menu

கொரோனா கட்டுப்பாட்டுகளை தளர்த்தியது டென்மாா்க்!

ஐரோப்பிய நாடுகளில் முதல் முறையாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து கட்டுப்பாட்டுகளையும் டென்மாா்க் விலக்கிக் கொண்டுள்ளது.

கடந்த வாரங்களில் தினசரி கொரோனா தொற்று 50 ஆயிரத்தைக் கடந்ததுள்ளது.

எனினும், புதிய வகை ஒமிக்ரோன் வகை கொரோனாவினால் நோயாளிகளின் உடல்நிலை அதிக அளவில் மோசமடையவில்லை. எனவே, மருத்துவமனைகளில் பணிச் சுமையும் அதிகரிக்கவில்லை.

எனவே, கொரோனா தொற்றை இனியும் சமூக அச்சுறுத்தல் நிறைந்த நோயாகக் கருதத் தேவையில்லை என டென்மாா்க் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, நோய் பரவல் கட்டுப்பாட்டு விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பகிரவும்...