Main Menu

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு காங்கிரஸ் மறைமுக ஆதரவு?

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில், இந்த சட்டமூலத்திற்கு  காங்கிரஸ் கட்சி கடந்த காலத்தில் ஆதரவு தெரிவித்துள்ளதாக பா.ஜ.க தெரிவித்துள்ளது. அத்துடன் அதனை உறுதிப்படுத்தும் வகையில் காணொலியொன்றினையும் தமது உத்தியோக ப்பூர்வ ருவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது.

கடந்த  2003ஆம் ஆண்டில் அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த மன்மோகன் சிங் இதே சட்டத்தை வலியுறுத்தி மாநிலங்களவையில் கருத்து தெரிவித்துள்ளார்.

குறித்த காணொலியில், ”பாகிஸ்தான்,  பங்களாதேஷ்  போன்ற அண்டை நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி அகதிகளாக இந்தியா வரும் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க வேண்டும்.

இது தொடர்பாக மத்திய அரசு பரந்த கண்ணோட்டத்துடன் செயல்பட வேண்டும். துணைப் பிரதமர் ( அப்போதைய துணைப் பிரதமர் அத்வானி) இதை மனதில் கொண்டு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவார் என்று நம்புகிறேன்” என்று மன்மோகன் சிங் பேசியுள்ளார்.

குறித்த காணொலியை வெளியிட்டுள்ள பா.ஜ.க தற்போது காங்கிரஸ் கட்சி உள்நோக்கத்துடன் செயற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

பகிரவும்...