Main Menu

கம்போடியாவில் வெள்ளப் பெருக்கு: சுமார் 2 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் நாசம்!

கம்போடியாவில் புர்சாட் மாகாணத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், சுமார் 2 இலட்சம் ஏக்கர் விளை நிலங்கள் நாசமாகியுள்ளன.

அத்துடன் பருவகால மழையால் இது கடந்த வாரம் பல மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்று பேரிடர் மேலாண்மைக்கான தேசிய குழுவின் செய்தித் தொடர்பாளர் குன் சோகா தெரிவித்தார்.

அத்துடன் வெள்ளப்பெருக்கில் சிக்கி 11பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த 11பேரில், 10 பேர் வெள்ளநீரில் மூழ்கியும் ஒருவர் மின்னல் தாக்கியும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், முக்கிய வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இராணுவத்தினரும், பொலிஸாரும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், 2 ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி திரட்டுமாறு பிரதமர் ஹுன் சென் உள்ளூர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நாட்டின் வடமேற்கு, பட்டம்பாங் மற்றும் புர்சாட் ஆகிய இரண்டு மோசமான மாகாணங்களிலேயே மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...