Main Menu

கண்ணீருடன் சொந்த மண்ணை தொட்ட சிரியா மக்கள்!

உள்ளூர் போர் காரணமாக தங்களது சொந்த மண்னை விட்டு வெளியேறிய சிரியாவின் ஹமா மாகாணத்தை சேர்ந்த மக்கள், தற்போது கண்ணீருடன் சொந்த மண்ணிற்கு முத்தம் கொடுத்துள்ளனர்.

உணர்ச்சி பூர்வமான இந்த சம்பவம் தற்போது, சிரியா ஊடகங்களில் தலைப்பு செய்திகளாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றன.

சிரியாவில் உள்நாட்டுப் போர் கடுமையாக நடந்த ஹமா மாகாணத்தில் உள்ள கனஸ் நகரில் ஐஎஸ் தீவிரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வரும் நிலையிலும் மக்கள் தங்கள் பகுதிகளுக்கு திரும்பி வருகின்றனர். சிரியா போருக்கு முன்னர் இப்பகுதியில் 21,000இற்க்கும் அதிகமான மக்கள் வாழ்ந்தனர்.

போர் காரணமாக தங்கள் வேலை, குடியிருப்பு பகுதிகளைவிட்டு மக்கள் அகதிகளாக பிற பகுதிகளுக்கு வெளியேறினர். தற்போது சிரியாவில் இயல்பு நிலை திரும்பி வருவதால் மக்கள் அவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். சுமார் 10,000 மக்கள்வரை தங்கள் சொந்த பகுதிகளுக்கு திரும்பி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பகிரவும்...