Main Menu

கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டாம் – உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், பல நாடுகள் ஊரடங்கை தளர்த்துவது குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோன வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ள நிலையில், உலகின் பல நாடுகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் சீனாவில் வைரஸ் தோற்றம் பெற்ற வுஹான் நகரில் எல்லைகள் திறக்கப்பட்டு விமானம் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர், டெட்ரோஸ் அதெனோம் கெப்ரியாசுஸ், தமது ஸ்தாபனம் குறித்த கட்டுப்பாடுகளை தளர்த்தவே விரும்புகிறது. எனினும் குறித்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகையில் வைரஸ் அபாயகரமாக மீள் எழுச்சி பெறும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இத்தாலி, ஜெர்மன், ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் நோய்த்தொற்று விகிதம் சற்றே குறைவடைந்திருந்தாலும், ஆபிரிக்காவின் 16 நாடுகளில் நாடுகளின் சமூகத்தினுள் நோய்த்தொற்று விகிதம் அதிகரித்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தோற்று காரணமாக இதுவரை ஒரு லட்சத்து இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தகக்கத்து.

பகிரவும்...